தா.பழூர்,செப்.13: தா.பழூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அகில இந்திய ஆசிரியர் கூட்டணி இணைந்து நடத்தும் பாரத் ரத யாத்திரை வாகனத்திற்கு வரவேற்கப்படுகிறது. தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அகில இந்திய ஆசிரியர் கூட்டணி இணைந்து நடத்தும் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கடந்த 5ம்தேதி கன்னியாகுமரியில் நாடு தழுவிய பாரத ரத யாத்திரை பிரச்சாரம் தொடங்கியது. அக்டோபர் 5ம்தேதி டெல்லியில் நிறைவடைகிறது. இந்த பாரத ரத யாத்திரை பிரச்சார வாகனம் அரியலூர் மாவட்டம் தா.பழூர் வந்தது. இதை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முன்னாள் மாநில செயற்குழு பாலசுப்பிரமணியம் தலைமையில் வரவேற்றனர்.
மாவட்ட பொருளாளர் மார்டின் ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார். அகில இந்திய ஆசிரியர் கூட்டணி பொருளாளர் ஹரி கோவிந்தன், செயல் தலைவர் பசவ ராஜ் குரிக்கர், இணைப் பொதுச்செயலாளர், அகில இந்திய ஆசிரியர் கூட்டணி, பொதுச்செயலாளர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, உலக தமிழ் ஆசிரியர் பேரவை பொதுச்செயலாளர் ரங்கராஜன் ஆகியோர் பிரச்சார எழுச்சி உரையாற்றினர். மகளிர் மாநில துணைத் தலைவர் அருமை கண்ணு, வட்டார பொறுப்பாளர்கள் கருப்பையன், அன்பு, சேகர், மாவட்ட மகளிர் வளைய அமைப்பு பொறுப்பாளர்கள் புஷ்பவல்லி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட செயலாளர் மாநில துணை தலைவர் எழில் நன்றி கூறினார்.