நாமக்கல், ஜூன் 26: நாமக்கல் அரசு மகளிர் கல்லூரி பின்புறம், புதிய தார்சாலை மற்றும் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கும் பணியை, ராஜேஸ்குமார் எம்பி துவக்கி வைத்தார்.
நாமக்கல் மாநகராட்சி 34வது வார்டு, கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக்கல்லூரி பின்புறம், ரூ.70 லட்சத்தில் மழைநீர் வடிகால் கால்வாய் மற்றும் புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் கலாநிதி தலைமை வகித்தார். எம்எல்ஏ ராமலிங்கம் முன்னிலை வகித்தார். இதில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி கலந்து கொண்டு, புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை மேயர் பூபதி, கமிஷனர் சிவக்குமார், திமுக நகர செயலாளர்கள் சிவக்குமார், ராணாஆனந்த், மாமன்ற உறுப்பினர்கள் இளம்பரிதி, கமலாதர்மலிங்கம், டாக்டர் விஜய்ஆனந்த், நந்தினிதேவி, லட்சுமி, திமுக சார்பு அணி நிர்வாகிகள் உமா சங்கர், சதீஸ், கடல்அரசன் கார்த்தி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.