தர்மபுரி, ஜூன் 4: பாலக்கோடு நெடுஞ்சாலை துறை உட்கோட்டத்தின் சார்பில், முடிவடைந்த சாலை பணிகள் பாலக்கோடு – கேசர்குழி சாலை, மாட்லாம்பட்டி – முருக்கம்பட்டி சாலை, புலிக்கரை- முக்குளம் சாலை மற்றும் சாமனுர் சாலை, சீங்கேரி சாலை ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்தன. இந்த சாலைகளின் தரம் குறித்து, நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது, சாலை பணிகளின் தரம், கனம், உரிய நீளம், அகலம் குறித்து ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் நாகராஜ், பாலக்கோடு நெடுஞ்சாலைதுறை உதவி கோட்டபொறியாளர் மங்கையர்க்கரசி, உதவி பொறியாளர் ரஞ்சித் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
தார்சாலை பணிகளை அதிகாரி நேரில் ஆய்வு
0
previous post