தாராபுரம், ஆக. 26: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களில் வசிக்கும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களின் குடிநீர் தேவைகளை ஈடு செய்ய அமராவதி ஆற்று நீருடன் காவிரி கூட்டு குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் கடுமையான கோடை காலத்தில் குடிநீர் கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில் தாராபுரம் பொள்ளாச்சி சாலையில் சமத்தூர் பிரிவு அருகே காவிரி கூட்டு குடிநீர் குழாய் இணைப்பு உடைந்து கடந்த ஐந்து நாட்களாக அங்கிருந்து தாராபுரம் அமராவதி சாலை வரை சுமார் 3 கி.மீ தூரத்திற்கு ஆறுபோல சாலையோரம் நீர் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. இந்நிலையில், துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக குழாய் உடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.