தாராபுரம், செப். 2: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர, குண்டடம் ஒன்றியம் திமுக மற்றும் திமுக இளைஞரணி சார்பில் பொது உறுப்பினர்களுக்கான சிறப்பு கூட்டம் திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் தலைமையில் திமுக நகர கழக நிர்வாகிகள், குண்டடம் ஒன்றிய கழக மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தாராபுரம் நகர மற்றும் இளைஞர் அணி சார்பில் நகர கழக செயலாளர் முருகானந்தம், நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், மாவட்ட துணைச் செயலாளர் பிரபாவதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, ஒன்றிய கழகச் செயலாளர் செந்தில் குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சன் பாலு, நகரவை தலைவர் கதிரவன்,
குண்டடம் ஒன்றியம் மற்றும் பேரூர் கழகம் சார்பில் ஈஸ்வர செட்டிபாளையத்தில் நடைபெற்ற பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் குண்டடம் ஒன்றிய கழக செயலாளர் சந்திரசேகர், ருத்ராவதிபேரூர் கழகச் செயலாளர் அன்பரசு, சடையபாளையம் ஊராட்சி தலைவர் ஈஸ்வரன், இளைஞரணி அமைப்பாளர் ஜெயக்குமார், மயில்சாமி, முத்துக்குமார், சோமசுந்தரம், மணி, ராமசாமி, மதிவண்ணன், பிஏபி கார்த்திகேயன், கோபாலகிருஷ்ணன், சசி, மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.