தாராபுரம், அக்.25: தாராபுரம் அருகே நூற்றாண்டுகள் பழைமையான காட்டம்மன் கோயிலில் ஆயுதபூஜை மற்றும் சரஸ்வதி பூஜை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. கோயில் பூசாரி கனகராஜ் மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடத்தினர். மேலும் கோயிலின் நிரந்தர கட்டளைதாரர் டாக்டர் ஜெய்லானி முன்னிலை வகித்து பூசாரிகள் மற்றும் கோயில் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு புத்தாடைகள் வழங்கினார்.
சமய நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற இச்சிறப்பு பூஜை விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் கட்டளைதாரர் ஜெய்லானியின் சார்பில் சர்க்கரை பொங்கல், புளியோதரை, சுண்டல் உள்ளிட்ட அறுசுவை உணவுகள் பிரசாதமாக வழங்கப்பட்டது. முன்னதாக காட்டம்மன் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதணை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிவப்பிரகாசம், தென்னந்தோப்பு மணி, சரவணன், யோகப்பிரியா, ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.