தாராபுரம், ஜூன் 11: தாராபுரம் அரசு பேருந்து டிரைவரை தாக்கிய விவகாரத்தில் கிளை மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி 2வது நாளாக அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்தில் தாராபுரம் அரசு பேருந்து டிரைவர் கணேசனை அரசு போக்குவரத்துக் கழக துணை மேலாளர் மாரிமுத்து தனது அறைக்கு அழைத்து செருப்பால் தாக்கிய சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டிரைவரை தாக்கிய கிளை மேலாளர் மாரிமுத்து மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 2வது நாளாக அரசு போக்குவரத்துக் கழக எல்பி எப் மற்றும் சிஐடியு சங்கத்தினர், ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து கழக தொழிலாளர் சங்கத்தினர் தாராபுரம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் எல்பிஎப் சங்கத்தின் தலைவர் பெருமாள் சாமி, டிடிஎஸ்எப் இன்பசேகரன், சிஐடியு ராமசாமி, ஏடிஎப் பொருளாளர் சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.