தாராபுரம், ஜூலை 25: தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகளின் சிறப்பு குறைதீர் கூட்டம் கோட்டாட்சியர் செந்தில் அரசன் தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளி நல அலுவலர் வசந்த் ராம்குமார், பேச்சுப் பயிற்சியாளர் முகமது ஆசிஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தாராபுரம், காங்கயம் பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, இருசக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், வீட்டு மனை பட்டா, சிறு தொழில்கள் பெட்டிக்கடைகள் மற்றும் அடையாள அட்டை போன்ற உள்ளிட்ட கோரிக்ைக வலியுறுத்தி மனுவாக வழங்கினர். இதில் 20 மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், சம்மந்தப்பட்ட அரசுத்துறை அலுவலர்களுக்கு வட்டாட்சியர் கோவிந்தசாமி மூலம் பகிர்ந்து அளிக்கப்பட்டு மனுக்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.