தாராபுரம், ஆக. 31: தாராபுரம் நகராட்சியில் ரூ.6.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை தாராபுரம் நகர்மன்ற தலைவர் துவக்கி வைத்தார். தாராபுரம் நகராட்சி, 22-வது வார்டுக்கு உள்பட்ட கொங்குநகர் பகுதியில், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ.6.45 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழை நீர் வடிகால் அமைக்கும் பணியை நகர்மன்றத் தலைவர் கு.பாப்பு கண்ணன் துவக்கி வைத்தார். இதில் நகராட்சிப் பொறியாளர் சண்முகவடிவு, நகர்மன்ற உறுப்பினர் சக்திவேல், திமுக கட்சியின் நகர அவைத் தலைவர் ப.கதிரவன், மகளிர் அணி சசிகலா ஜிம் கவிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.