பெரணமல்லூர், செப்.4: பெரணமல்லூர் அருகே தாய் வீட்டுக்கு வந்த பெண்ணை யாரேனும் கடத்தி சென்றார்களா என போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். பெரணமல்லூர் அடுத்த எஸ்.காட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் வேலு(57). இவரின் மூத்த மகள் கன்னியம்மாள்(37). இவருக்கு கல்பூண்டி பகுதியை சேர்ந்த தர் என்பவரை திருமணம் செய்து வைத்து சென்னை பெருங்களத்தூரில் வசித்து வருகின்றனர். தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 20 நாட்களுக்கு முன்பு தனது தாய் வீட்டுக்கு சென்று வருவதாக கூறிவிட்டு குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு தனியாக கன்னியம்மாள் எஸ்.காட்டேரி கிராமத்துக்கு வந்துள்ளார். இதனைத்தொடர்ந்து நேற்றுமுன்தினம் தாய் வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லையாம். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது தந்தை வேலு உறவினர்கள் இடத்தில் விசாரித்தும், கணவரிடம் கேட்டும் எங்கும்வரவில்லையாம். இதுகுறித்து வேலு கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து கன்னியம்மாளை யாரேனும் கடத்தி சென்றார்களா என விசாரித்து தேடி வருகின்றனர்.
தாய் வீட்டுக்கு வந்த பெண் கடத்தலா? பெரணமல்லூர் அருகே
previous post