கரூர், ஜூன் 4: தாந்தோணி ஒன்றியம் கவுண்டம்பாளையம் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.தமிழகம் முழுவதும் ஜூன் 2ம்தேதி அனைத்து அரசு மற்றும் உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் உட்பட பல்வேறு குறிப்பேடுகள் வழங்கப்பட்டன. இதனை முன்னிட்டு கரூர் மாவட்டத்திலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனடிப்படையில், கருர் மாவட்டம் தாந்தோணி ஒன்றியம் கவுண்டம்பாளைம் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தாந்தோணி வட்டார கல்வி அலுவலர் சதீஷ்குமார் கலந்து கொண்டு பாடப்புத்தகங்கள் மற்றும் அனைத்து உபகரணங்களையும் வழங்கினார்.இந்த நிகழ்வில், தலைமையாசிரியர் பரணிதரன் உட்பட அனைத்து ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்
தாந்தோணி ஒன்றியம் கவுண்டம்பாளையம் தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கல்
0
previous post