கரூர், ஜூலை 2: கரூர் தாந்தோணிமலை அருகே பைக்கில் சென்ற எஸ்ஐ மீது ஆட்டோ மோதிய சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனனர்.
கரூர் மாவட்டம் புலியூர் மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம்(59). இவர், எஸ்பிசிஐடி காவல்துறை பிரிவில் எஸ்ஐயாக பணியாற்றி வருகிறார்.
நேற்று முன்தினம் மதியம் எஸ்ஐ தனது பைக்கில் தாந்தோணிமலை கடைவீதி வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த ஆட்டோ, பைக் மீது மோதியது.
இதில், எஸ்ஐக்கு வலது காலில் காயம் ஏற்பட்டது. காயமடைந்த எஸ்ஐ தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். சம்பவம் குறித்து தாந்தோணிமலை போலீசார் ஆட்டோ டிரைவர் மீது வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.