கரூர், ஜூன் 7: கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் நேற்று நடந்த இரண்டாம் நாள் கலந்தாய்வில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கரூர் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில், 18 இளநிலை பாடப்பிரிவுகளில் உள்ள 1,485 இடங்களுக்கான மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு கடந்த 2ம் தேதி முதல் துவங்கியது. இரண்டாம் நாள் இரண்டு நாட்கள் சிறப்பு பிரிவினர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற கலந்தாய்வில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, கல்லூரி ஆடிட்டோரியத்தில் 4ம் தேதி முதல் 14ம் தேதி வரை பொது கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று இரண்டாவது நாளாக பொது கலந்தாய்வு நடைபெற்றது. கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களின் பாடப்பிரிவுகளை தேர்வு செய்தனர்.