உத்தமபாளையம், பிப்.13: உத்தமபாளையம் புதிய வட்டாட்சியராக, ஆண்டிபட்டி தாலுகாவில் பணிபுரிந்த கண்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார். அதேபோல் போடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணியாற்றிய ஜாகிர் உசேன், ஆண்டிபட்டி தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார். உத்தமபாளையம் தாசில்தாராக இருந்த சுந்தர்லால், தேனி பேரிடர் மேலாண்மை பிரிவிற்கு தாசில்தாராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல் மாவட்ட அளவில் 9 தாசில்தார்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
தாசில்தார் பொறுப்பேற்பு
0