தேன்கனிக்கோட்டை, செப்.3:தேன்கனிக்கோட்டை தாசில்தாராக பணியாற்றி வந்த பரிமேல் அழகன், ஓசூர் இனாம் செட்டில்மெண்ட் (அலகு 2க்கு) தாசில்தாராக மாற்றப்பட்டார். இதையடுத்து சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளராக இருந்த கோகுல்நாத் தேன்கனிக்கோட்டை தாசில்தாராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து அவர் நேற்று தாசில்தாராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு துணை தாசில்தார்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், வருவாய்துறை அலுவலர்கள், விவசாய சங்க தலைவர்கள், பிரதிநிதிகள் வாழ்த்து தெரிவித்தனர்.