ஓட்டப்பிடாரம், மே 8: தூத்துக்குடி மாவட்டத்தில் நிர்வாக வசதிக்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு தாலுகா அலுவலகங்கள், நிலம் எடுப்பு மற்றும் பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய 31 தாசில்தார்களை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் பணியிட மாறுதல் செய்து உத்தரவிட்டார். அதன்படி ஓட்டப்பிடாரம் தாசில்தாராக பணியாற்றிய நிஷாந்தினி, கோவில்பட்டி கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளராக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தூத்துக்குடி நெடுஞ்சாலை பணியில் நிலம் எடுப்பு தனி தாசில்தாராக பணியாற்றிய சுரேஷ் ஓட்டப்பிடாரம் தாசில்தாராக இடமாறுதல் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்ற தாசில்தாரை தலைமையிடத்து துணை தாசில்தார், மண்டல துணை தாசில்தார்கள், தேர்தல் மற்றும் வட்ட வழங்கல் துணை தாசில்தார்கள் உள்ளிட்ட அலுவலக அதிகாரிகள், ஊழியர்கள் உள்ளிட்ட பலரும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.