போடி, செப். 6: தேனி மாவட்டம், போடி அருகே உள்ள தர்மத்துப்பட்டி பாரதியார் தெருவை சேர்ந்தவர் இருளப்பன் (எ) சின்ராசு (72). இவர் நேற்று முன் தினம் சில்லமரத்துப்பட்டி பஸ் நிறுத்தத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார். அங்கு வந்த அம்மாபட்டியை சேர்ந்த ஜெகவீராபாண்டியன் இருளப்பனுடன் தகராறு செய்ததுடன், அவரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் இருளப்பன் படுகாயமடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில் போடி தாலுகா காவல் நிலைய எஸ்ஐ கோதண்டராமன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.