தேன்கனிக்கோட்டை, செப்.3: தளி வடக்கு ஒன்றிய திமுக சார்பில், பொது உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய அவைத்தலைவர் கிரிஸ் தலைமை தாங்கினார். தளி வடக்கு ஒன்றிய செயலாளர் சீனிவாசலு ரெட்டி வரவேற்றார். மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் கொமாரணப்பள்ளியை சேர்ந்த மதுரெட்டி, முனிராஜ், நாராயணசாமி, கணேஷ், வெங்கடேஷ், மது, சாரகப்பள்ளி கிராமத்தை சேர்ந்த வசந்தப்பா, முனியப்பா, மதகொண்டப்பள்ளியை சேர்ந்த மதலைமுத்து, இம்ரான், வீரபத்திரப்பா, பவுல்ராஜ் உள்ளிட்ட 50பேர், பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தனர். அவர்களை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பிரகாஷ் எம்எல்ஏ வரவேற்று கட்சி துண்டு அணிவித்தார். நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
தளி வடக்கு ஒன்றியத்தில் திமுகவில் இணைந்த பல்வேறு கட்சியினர்
previous post