உடுமலை: தளி பேரூராட்சியில் நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் கான்கிரீட் சாலை மற்றும் மாநில நிதி குழு திட்டத்தின் கீழ் தார் சாலை அமைக்கும் பணிகள் சுமார் 1.70 லட்சம் மதிப்பில் துவங்கியது. இப்பணிகளை செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல.பத்மநாபன் பூமி பூஜை நடத்தி துவக்கி வைத்தனர். இவ்விழாவில் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், ஒன்றிய குழு தலைவர் மகாலட்சுமிமுருகன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் ரவி, அறநிலைய துறை உறுப்பினர், சாமி மற்றும் தளிபேரூராட்சி மன்ற தலைவர் உதயகுமார், செயல் அலுவலர் கல்பனா, பேரூராட்சி துணை செயலாளர் செல்வம், திமுக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், வார்டு கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் குடிமங்கலம் ஒன்றியம் புக்குளம் ஊராட்சி மன்ற அலுவலகத்தை அமைச்சர் சாமிநாதன் திறந்துவைத்தார்.