ராஜபாளையம், செப்.12: ராஜபாளையம் அருகே தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப்பள்ளி மற்றும் அம்மையப்ப நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் சிங்கராஜ் விலையில்லா சைக்கிள்களை வழங்கினார்.
பின்னர் சேர்மன் பேசுகையில், தமிழ்நாடு முதல்வர் மகளிருக்கான இலவச பேருந்து வசதி மற்றும் மாதம் ரூபாய் ஆயிரம் போன்ற பல்வேறு திட்டங்களையும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான காலை உணவு திட்டம், விலையில்லா மிதிவண்டி, கணினி மற்றும் நமது ஒன்றிய பகுதிகளில் புதிய பள்ளி கட்டிடங்கள், பள்ளிகளுக்கான சமையலறை அங்கன்வாடி மையம் என பல கட்டிட வேலைகள் மற்றும் சாலை வசதிகளை தனிக்கவனம் செலுத்தி செய்து வருகிறார் என தெரிவித்தார்.
இவ்விழாவில் திமுக விருதுநகர் மாவட்ட மீனவர் அணி நவமணி, பள்ளியின் தலைவர் உதயசூரியன், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் பாலாஜி, பெண்கள் பள்ளி செயலாளர் ராஜ்பாபு மற்றும் தலைமை ஆசிரியர்கள் தனபாலன், வள்ளியம்மை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.