மன்னார்குடி, அக். 20: மன்னார்குடி அடுத்த தலையாமங்கலம் ஊராட்சியில் தோட்டக்கலைத்துறை தேசிய பூங்கில் இயக்கத் திட்டத்தின் கீழ் மூங்கில் பரப்பு விரிவாக்கம் செய் யப் பட்டது. திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டார தோட்டக்கலைத்துறை தேசிய மூங்கில் இயக்கம் ( 2023- 24) திட்ட த்தின் கீழ் பொது இடங்களில் மூங்கில் பரப்பு விரிவாக்க செய்யும் பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.
அதன்படி, மன்னார்குடி அடுத்த தலையாமங்கலம் ஊராட்சி மன்ற அலுவல கம் அருகிலுள்ள சிற்ப சாஸ்திரி குளத்தின் வரப்பு ஓரங்களில் ஊராட்சி மன்ற தலைவர் கலைராணி பாலகிருஷ்ணன், மன்னார்குடி வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சத்ய ஜோதி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கீர்த்தி கா, கார்த்தி ஆகியோர் முன்னிலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரகவேலை உறுதி திட்டத்தின் கீழ் பணி புரியும் பணியாளர்களை கொண்டு நேற்று மூங் கில் நடவு செய்யப்பட்டது.
இது பொது இடங்களில் மரங்கள் வளர்ப்பு, சுத்தமான காற்று பெறுதல் மற் றும் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு போன்ற நோக்கங்களை கொண்டு இந்த திட்டம் தோட்டக்கலை துறையால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.