சிவகிரி, ஜூன் 28: தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள தலையணையில் பழங்குடியினர் நலத்துறை முகாம் நேற்று தொடங்கியது. முகாமிற்கு சமூகப் பாதுகாப்பு திட்ட தாசில்தார் மைதீன் பட்டாணி தலைமை வகித்தார். குடிமைப் பொருள் தாசில்தார் ராணி முன்னிலை வகித்தார்.
முகாமில் ஆதார் அட்டை, சாதிச்சான்று, வருமானச் சான்று, குடியிருப்புச் சான்று, கலைஞர் மகளிர் உதவித்தொகை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட அரசு திட்டங்களை பெறுவது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டது. இதில் வருவாய் ஆய்வாளர் இந்துமதி, கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், முதுநிலை வருவாய் ஆய்வாளர் வசந்தா மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முதுநிலை ஆய்வாளர் கணேசன் நன்றி கூறினார். பழங்குடியின மக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் உரிய நடவடிக்கைக்காக துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இம்முகாம் வருகிற 30ம்தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.