தேனி, ஜூலை 1 :தமிழ்நாடு காவல்துறையில் 2ம் நிலைக் காவலர்களாக பணியில் சேருபவர்கள் முதல் 10 ஆண்டுகள் பணிபுரிந்ததும், முதல்நிலைக்காவலர்களாக பதவி உயர்வு பெறுவர். தற்போது அரசு பணி நிறைவு செய்தாலே சிறப்பு சார்பு ஆய்வாளர் பணி வழங்க உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, 13 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் முதல் நிலைக்காவலர் நிலையில் இருந்து தலைமைக் காவலர்களாக பதவி உயர்வு பெறும் சிறப்பு உருவாகி உள்ளது.
இதன்படி, தற்போது தேனி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பணிபுரிந்து வரும் 108 முதல்நிலைக்காவலர்கள் மற்றும் 9 ஆயுதப்படை முதல்நிலைக்காவலர்கள் என மொத்தம் 127 முதல் நிலைக்காவலர்கள் தலைமைக் காவலர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.