பல்லாவரம்: கடந்த இரு தினங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் அடுத்த நம்பிபுரம் கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியை, பள்ளியில் ஒழுக்கம் இல்லாமல் நடந்து கொண்ட இரண்டாம் வகுப்பு மாணவனை கண்டித்தார். இதனால், ஆத்திரமடைந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களின் முன்னிலையில், ஆசிரியர்கள் இருவரையும் கைகளாலும், செருப்பாலும் கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பல்வேறு அமைப்புகளும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நேற்று பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள மறைமலை அடிகள் அரசுப் பள்ளியில் ஆசிரியர்கள் அனைவரும், கருப்பு பட்டை அணிந்து தங்களது கண்டனத்தை தெரிவிக்கும் வகையில், மாணவர்களுக்கு பாடம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது….