நாக்கோவில், நவ.19: தலைமை ஆசிரியர் காலி பணியிடம் 3 சதவீதம் வட்டார கல்வி அலுவலரால் நிரப்பப்படும் என்று கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு (தொடக்க கல்வி) அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசாணைகளில் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களில் 3 சதவீதம் காலி பணியிடங்களை வட்டார கல்வி அலுவலர்களை கொண்டு பணி மாறுதல் மூலம் நிரப்பிட ஆணையிடப்பட்டுள்ளது.
வட்டார கல்வி அலுவலர்களை பணி மாறுதல் மூலமாக 3 சதவீதம் அரசு உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் காலி பணியிடங்களில் நியமனம் செய்ய 1.1.2023 நிலவரப்படி 31.12.2008க்கு முன்னர் வட்டார கல்வி அலுவலர் பணியில் சேர்ந்த வட்டார கல்வி அலுவலர்களின் விபரங்களை நடைமுறையில் உள்ள விதிகளின்படி பரிசீலனை செய்து தகுதிவாய்ந்த வட்டார கல்வி அலுவலர்களின் விபரங்களை அனுப்பிட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.