நாமக்கல், ஜூலை 7: நாமக்கல்லில், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட கல்வி அலுவலர் விஜயன் தலைமை வகித்து பேசினார். முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். இதில், அரசு பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அடிப்படை இயந்திரவியல், அடிப்படை மின் பொறியியல், அடிப்படை மின்னணு பொறியியல் உள்ளிட்ட 12 பாடப்பிரிவுகளில், ஒன்றை, தொழிற்கல்வி இல்லாத அரசு பள்ளிகளில் தொடங்க வேண்டும். புதிய தொழிற்கல்வியை தொடங்குவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், அதன் நன்மைகள் குறித்து தலைமை ஆசிரியர்களுக்கு விளக்கப்பட்டது.
தலைமை ஆசிரியர்கள் ஆலோசனை கூட்டம்
55
previous post