செய்யாறு, ஜூலை 2: செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் தலை முடியில் இருந்து உரம் தயாரித்து மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையும், தமிழ்நாடு தொழில் முதலிட்டு கழகமும் இணைந்து பள்ளி மாணவர்களை தொழில் முனைவோராக மாற்றும் திட்டம் எஸ்ஐடிபி 3.0. பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தில் அரசு பள்ளி மாணவர்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து வருகின்றனர். அவ்வாறு செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மனித தலை முடியில் இருந்து உரம் தயாரித்து சாதனை படைத்துள்ளனர். மாநில அளவில் இரண்டாம் பரிசும், ரூ.50,000 ஊக்கப்பரிசும் பெற்றுள்ளார்கள். வெற்றி பெற்ற மாணவர்கள் தருண், ரூபேஷ் கண்ணா, கோகுல், தேவ்ராஜ், அழகரசன் ஆகியோரையும் வழிகாட்டி ஆசிரியர் செல்வகணபதி ஆகியோரை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயகாந்தன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் அசோக், பள்ளி மேலாண்மை குழு தலைவர் பார்வதி, வேளாண்மை குழு தலைவர் ரமேஷ் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.
தலைமுடியில் இருந்து உயிரி உரம் தயாரித்து மாநில அளவில் சாதனை செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்
0