சேலம், செப்.5: சேலம் செவ்வாய்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மாலா(40). இவர் தம்பி அண்ணாமலையுடன் காரிப்பட்டி பக்கமுள்ள திங்கள்சந்தையில் பேக்கரி நடத்தி வருகிறார். வாழப்பாடி பக்கமுள்ள சிங்கிபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவர் பேக்கரிக்கு அடிக்கடி வந்து சென்றார். அப்போது, தான் மாட்டுதீவன தொழில் செய்வதாகவும், இதில் அண்ணாமலையை பார்ட்னராக சேர்த்துக்ெகாள்வதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். இதனை நம்பிய மாலா, ₹30 லட்ச ரூபாயை மணிகண்டனிடம் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட மணிகண்டன், அவரை பார்ட்னராக சேர்க்கவில்லை. ெகாடுத்த பணத்தையும் திரும்ப தருமாறு கேட்டும் கொடுக்கவில்லை. இதனால், மாலா காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார். சிங்கிபுரம் முருகன்கோவில் பகுதியை சேர்ந்த மணிகண்டன், அவரது தந்தை ராஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், நேற்று தலைமறைவாக இருந்த மணிகண்டனை(34) போலீசார் கைது செய்தனர். அவரது தந்தை ராஜாவை தேடி வருகின்றனர்.
தலைமறைவாக இருந்த வாலிபர் கைது
previous post