வேதாரண்யம் ஜூன் 24: தலைஞாயிறு ஒன்றியத்தில் 1.80 கோடி மதிப்பீட்டில் புத்தூர்-ஓடாசேரி இணைப்பு சாலை மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு ஒன்றியம் புத்தூர் ஊராட்சியில் புத்தூர் ஓடாசேரி இணைப்பு சாலை முதலமைச்சர் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் இரண்டாரைகிலோ மீட்டர் தூரத்திற்கு ரூபாய் ஒரு கோடியே 80 லட்சம் செலவில் சாலை அமைப்பதற்குஅனுமதி பெற்று, பூமி பூஜை நடைபெற்றது . மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மற்றும் தலைஞாயிறு ஒன்றிய திமுக செயலாளர் மகாகுமார் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடக்கி வைத்தார். நிகழ்ச்சியில் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் ராஜு, சிங்காரவேலு, ஒன்றிய பொருளாளர் மாரியப்பன், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
கடந்த பத்து ஆண்டுகளாக செப்பனிடப்படாமல் இருந்த இந்த சாலை தற்போது ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சீரமைப்பு பணி துவங்கப்பட்டுள்ளது என்றும், இந்த சாலையால் இப்பகுதியில் உள்ள ஆயிரம் குடும்பத்தினர் மற்றும் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்றும் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய ஆணையர் ராஜீ தெரிவித்தார்.