அஞ்சுகிராமம், ஆக. 12: அஞ்சுகிராமம் அருகேயுள்ள வாரியூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. கருத்தரங்கில் கன்னியாகுமரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் பிரபு பங்கேற்று மாணவ, மாணவிகளிடையே பேசியதாவது: போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு சென்று வர வேண்டும். சாலை விதிகளை பின்பற்றி நடந்தால் விபத்துகள் ஏற்படுவது குறையும்.
மேலும், இருச்சக்கர வாகனங்களில் செல்லும் போது தங்கள் பெற்றோர்களிடம் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் போது சீட்பெல்ட் அணிவதன் அவசியத்தையும் எடுத்துக்கூறி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இதில் போக்குவரத்து உதவி ஆய்வாளர் ஜெயபிரகாஷ், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பால்கனி, அய்யப்பன், பள்ளி தலைமை ஆசிரியர் அலெக்ஸாண்டர் சாம்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மேட்டுக்குடி முருகன், செயலாளர் வாரியூர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.