மாமல்லபுரம், ஜூன் 11: மாமல்லபுரம், தலசயன பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கையாக, ₹4.56 லட்சத்தை பக்தர்கள் செலுத்தியுள்ளனர். மாமல்லபுரம், தலசயன பெருமாள் கோயில் 108 திவ்ய தேசங்களில் 63வது திவ்ய தேசமாக திகழ்ந்து வருகிறது. தமிழ் நாட்டின், பல்வேறு மாவட்டங்கள், இந்தியாவின் பிற மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நிலம் சம்பந்தமான பிரச்னைகள் தீர தலசயன பெருமாளை தரிசனம் செய்ய வருவது வழக்கம். அப்படி வரும் பக்தர்கள் காணிக்கையாக அங்குள்ள உண்டியலில் பணம் போடுகின்றனர். இந்நிலையில், ஆளவந்தார் அறக்கட்டளை செயல் அலுவலர் சக்திவேல் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு உண்டியல் காணிக்கையை உள்ளூர் மக்கள் மூலம் எண்ணும் பணி நடந்தது. இதில், 4 மாதங்களில் ₹4.56 லட்சம் காணிக்கையாக செலுத்தப்பட்டிருப்பதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
தலசயன பெருமாள் கோயில் உண்டியல் காணிக்கை ₹4.56 லட்சம் வசூல்
76