தர்மபுரி, ஜூலை 19: திருவண்ணாமலை மாவட்டம், கோட்டவூர் பகுதியை சேர்ந்தவர் ராஜவேல்(45). இவர் தர்மபுரி மாவட்டம், செம்மாண்டப்பட்டி புதுத்தெருவில் தங்கி விசைத்தறி ஓட்டி வந்தார். கடந்த புதன்கிழமை இரவு, செம்மாண்டப்பட்டி – ஓமலூர் ரயில்வே தண்டவாளத்தில் ராஜவேல் இறந்து கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ரயில்வே போலீசார், அவரது உடலை கைப்பற்றி விசாரித்தனர். அதில், அவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது, ரயில் மோதியதில் அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தறித்தொழிலாளி ரயில் மோதி பலி
44
previous post