Monday, February 26, 2024
Home » தர்மபுரி நகர்மன்ற சாதாரண கூட்டம்

தர்மபுரி நகர்மன்ற சாதாரண கூட்டம்

by Karthik Yash

தர்மபுரி, டிச.30: தர்மபுரி பஸ் ஸ்டாண்டில், குற்றங்களை தடுக்க புதிய மின்விளக்குகளை பொருத்த வேண்டும் என, நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். தர்மபுரி நகர்மன்ற சாதாரண கூட்டம், நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான்மாது தலைமையில் அண்ணா கூட்டரங்கில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் நித்யா அன்பழகன் முன்னிலை வகித்தார். ஆணையர் புவனேஸ்வரன் வரவேற்றார். நகரமன்ற உறுப்பினர்கள், பொறியாளர் புவனேஸ்வரி, ராஜரத்தினம், அலுவலர்கள் மாதையன், முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், ₹30 லட்சம் மதிப்பில் சுகாதார மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், கவுன்சிலர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினர்.

18வது வார்டு புறநகர் மற்றும் டவுன் பஸ் ஸ்டாண்டில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின்விளக்கு போதிய வெளிச்சம் இல்லாமல் இருட்டில் உள்ளது. இதனால் குற்றங்கள் நடக்க வாய்ப்பு உள்ளது. எனவே, புதியதாக மின்மிளக்கு பொருத்த வேண்டும். மேலும், டவுன் ஹால் விவேகானந்தா மாளிகை மற்றும் நகராட்சி தொடக்கப்பள்ளி அருகே, பொது இடத்தில் சிறுநீர் கழிப்பதை நகராட்சி நிர்வாகம் தடுக்க வேண்டும். 5வது வார்டில் மக்கள் வைக்கும் கோரிக்கைகளை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என்றனர். கவுன்சிலர்களின் கோரிக்கைக்கு பதிலளித்த நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான்மாது, ஆணையர் புவனேஸ்வரன் ஆகியோர் கூறுகையில், ‘கவுன்சிலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்,’ என்றனர். இக்கூட்டம் பிற்பகல் 12.15 மணிக்கு தொடங்கி 12.35 மணிக்கு முடிந்தது.

You may also like

Leave a Comment

13 + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi