தர்மபுரி, ஜூலை 4: பாலக்கோடு அருகே மாரண்டஅள்ளி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ஜாஜஹான் மகள் ஷர்மிளா(20). இவர் நேற்று தர்மபுரி எஸ்பி அலுவலகத்தில் போலீசாரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: நான் கடந்த 6 வருடங்களாக, மாரண்டஅள்ளியை சேர்ந்தவர் முருகன் பிரதீப்(22) என்பவரை காதலித்து வந்தேன். கடந்த 26ம் மாதம் தேதி வீட்டை விட்டு வெளியேறி, 27ம்தேதி நானும், பிரதீப்பும் பெங்களூருவில் திருமணம் செய்து கொண்டோம். எனது பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், மாரண்டஅள்ளி போலீசார் எங்களை விசாரணைக்கு அழைத்துள்ளனர். எங்கள் இருவருக்கும் மாவட்ட காவல் துறை உயிர் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, எஸ்பி மகேஸ்வரன் உத்தரவின் பேரில், போலீசார் இருதரப்பு பெற்றோரையும், எஸ்பி அலுவலகத்துக்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
தர்மபுரி எஸ்பி ஆபீசில் காதல் ஜோடி தஞ்சம்
0
previous post