தர்மபுரி, மே 20: தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி பாமாண்டி தெருவைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். கூலி தொழிலாளியான இவரது மனைவி ஆர்த்தி. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில், ஆர்த்தி மீண்டும் கர்ப்பமடைந்தார். 28 நாட்களுக்கு முன்பு ஆர்த்திக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு யூகன் என பெயர் வைத்துள்ளனர். குழந்தை பிறந்ததால், கம்ைபநல்லூர் பூங்கா நகரில் உள்ள தாய் வீட்டில் ஆர்த்தி தங்கியுள்ளார். கடந்த 17ம் தேதி இரவு, குழந்தைக்கு பால் கொடுத்து விட்டு தூங்க வைத்துள்ளார். மறுநாள் காலை பார்த்தபோது, குழந்தையின் மூக்கில் ரத்தம் வழிந்த நிலையில் காணப்பட்டது. இதனால், அதிர்ச்சியடைந்து குழந்தையை, அருகேயுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்த டாக்டர்கள் பரிசோதித்து பார்த்து விட்டு, குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தர்மபுரி அருகே பிறந்து 28 நாட்களேயான ஆண் குழந்தை மர்ம சாவு போலீசார் விசாரணை
0
previous post