தர்மபுரி: தர்மபுரியில், பட்டாசு கடை மற்றும் வெடிமருந்து கிடங்குகளை ஆய்வு செய்யும் அலுவலர்கள் மற்றும் பட்டாசு கடை உரிமையாளர்கள், பட்டாசு கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடந்தது. முகாமிற்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் பழனிதேவி தலைமை வகித்தார். கலெக்டர் அலுவலக மேலாளர் சுகுமார் முன்னிலை வகித்தார். ஆர்டிஓ கீதாராணி, தர்மபுரி மாவட்ட தீயணைப்பு துறை அலுவலர் ஆனந்த், தொழிற்சாலை ஆய்வாளர் சந்திரமோகன் ஆகியோர் பட்டாசுகளை பாதுகாப்பாக கையாள்வது குறித்து பேசினர். முகாமில், பட்டாசு உரிமையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சேகர், செயலாளர் ரமேஷ்குமார், பொருளாளர் குமார், அரூர் சங்க நிர்வாகிகள் குமரேசன், குமார், தர்மபுரி நகர நிர்வாகிகள் மாது, கார்த்திகேயன், சக்தி, முருகவேல், பிரபு, கணேசன், தாசில்தார்கள் ஜெயவேல், ஆறுமுகம், இன்ஸ்பெக்டர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், பட்டாசு உற்பத்தியாளர்கள், பட்டாசு விற்பனையாளர்கள் கலந்து கொண்டனர்.