தர்மபுரி, செப்.1: தர்மபுரி கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில், நீட் எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்க செலுத்தும் நிகழ்ச்சி இன்று(1ம் தேதி) நடக்கிறது. துகுறித்து கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் தடங்கம் சுப்ரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ட் தேர்வு திணிப்பால் மரணத்தை தழுவிய தங்கை அனிதாவின் நினைவு நாளையொட்டி, நீட் எதிர்ப்பு போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி அண்ணா சிலை முன்பு, இன்று(1ம் தேதி) காலை 9 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மாணவரணி அமைப்பைச் சேர்ந்தவர்கள், கூட்டணி கட்சிகளின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள், மாநில மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர- பேரூர், ஊராட்சி, வார்டு, கிளை நிர்வாகிகள், சார்பு அணிகளின் தலைவர்கள், துணைத் தலைவர்கள், அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. வ்வாறு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி தெரிவித்துள்ளார்.