சிவகங்கை, ஜூன் 26: சிவகங்கையில் வருவாய்த்துறை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி மற்றும் தர்ணா போராட்டம் நடைபெற்றது. கோர்ட் வாசலில் உள்ள ராமச்சந்திரனார் பூங்கா முதல் கலெக்டர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்றனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் சேகர், நாகேந்திரன், கார்த்திக், ராஜமார்த்தாண்டன், மாரி, பாண்டித்துரை ஆகியோர் கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்க மாநிலத் துணைத் தலைவர் தமிழரசன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வருவாய்த் துறைக்கு என சிறப்பு பணிப்பாதுகாப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாவட்ட செயலாளர் கிருஷ்ணக்குமார் நன்றி கூறினார்.