பந்தலூர், ஆக. 21: பந்தலூர் அருகே பிதர்காடு வனப்பகுதியில் உடல் சிதைந்த நிலையில் ஆண் சடலம். போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நெலாக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பிதர்காடு தம்பிராட்டிகுன்னு வனப்பகுதியில் ஆண் சடலம் தூக்கில் தொங்குவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு அம்பலமூலா காவல்நிலைய பொறுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடல் முழுவதும் சிதைந்து அடையாளம் தெரியாமல் தூக்கில் தொங்கிய உடலை மீட்டு விசாரனை மேற்கொண்டதில் கடந்த 8ம் தேதி அம்பலமூலா பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கிருஷ்ணன் (40), என்பவர் காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் தெரிவித்திருந்த நிலையில் அவர் தான் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போலீசார் உறுதி செய்தனர்.