தரங்கம்பாடி, ஜூன் 27: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் இரவு நேர துப்புரவு பணியை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதாமுருகன் தொடங்கி வைத்தார்.
தரங்கம்பாடி பேரூராட்சியில், பொறையாரில் முதல் முறையாக 18 வார்டுக்கு உட்பட்ட கடைத்தெரு பகுதிகளில் இரவு நேரங்களில் குப்பைகளை அகற்றும் துப்புரவு பணியை மேற்கொள்வதற்காக 5 லட்சம் மதிப்புள்ள இரண்டு புதிய மின்சார வண்டிகளை மயிலாடுதுறை மாவட்ட செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதாமுருகன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமரவேல், பேரூராட்சி இளநிலை உதவியாளர் மதியரசன், சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசன், நகர திமுக செயலாளர் முத்துராஜா, துணைத் தலைவர் பொன்.ராஜேந்திரன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், செயலாளர்கள், திமுக நிர்வாகிகள், துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.