தரங்கம்பாடி, ஜூன் 19: மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் காந்த் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
மயிலாடுதுறை கலெக்டர் காந்த் மற்றும் கூடுதல் மாவட்ட ஆட்சியர் முகமதுஷபீர் ஆலம் ஆகியோர் தரங்கம்பாடி தாலுகா அலுவலகத்தில் பல்வேறு பணிகள் குறித்து ஆய்வு செய்தனர். இ-சேவை மையம், நிரந்தர ஆதார் சேகரிப்பு மையம், வருவாய்துறை மூலம் வழங்கபடும் சேவைகள் குறித்த தகவல் பலகை மற்றும் சமூக நலத்திட்ட பணிகள் குறித்தும் நேரில் ஆய்வு செய்தார். பல்வேறு பணிகள் குறித்து அங்குள்ள பணியாளர்களிடம் விளக்கம் கேட்டார். மாவட்ட ஆட்சியருடன் தரங்கம்பாடி தாசில்தார் சதீஷ்குமார், சமூக நலத்துறை தனி தாசில்தார் பிரான்சுவா ஆகியோர் உடனிருந்தனார்.