Monday, February 26, 2024
Home » தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கவிதை, கட்டுரை பேச்சு போட்டி

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கவிதை, கட்டுரை பேச்சு போட்டி

by Suresh

சிவகங்கை, ஜன.7: சிவகங்கையில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளிடையே பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் மாவட்ட அளவில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு இப்போட்டிகள் சிவகங்கை மன்னர் துரைச்சிங்கம் அரசு கலைக்கல்லூரி வளாக அரங்கில் ஜன.9 மற்றும் ஜன.10 ஆகிய இரண்டு நாட்கள் காலை 9.30மணியளவில் தொடங்கி நடைபெற உள்ளன.

ஒவ்வொருப் போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசுத்தொகை ரூ.10,000, இரண்டாம் பரிசுத் தொகை ரூ.7,000, மூன்றாம் பரிசுத்தொகை ரூ.5,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு போட்டியிலும் முதல் பரிசு பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள பரிந்துரைக்கப்படுவர்.சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் 11ம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பயில்பவர்கள் மற்றும் அனைத்துக் கல்லூரிகளில் பயில்பவர்கள் மட்டுமே இப்போட்டிகளில் பங்கேற்கலாம். ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் ஒரு போட்டிக்கு ஒருவர் வீதம் 3பேரும், ஒவ்வொரு கல்லூரியிலிருந்தும் ஒரு போட்டிக்கு இருவர் வீதம் 6பேர் மட்டுமே பங்கேற்க முடியும். போட்டிகளுக்கான தலைப்புகள் போட்டிகள் தொடங்கும் முன்பு அறிவிக்கப்படும்.

போட்டியில் பங்கேற்க உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து பள்ளி தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் சிவகங்கை மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் போட்டிகள் நடைபெறும் நாளன்று நேரில் அளிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரை நேரிலோ அல்லது 04575 241487, 99522 80798 என்ற எண்கள் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

four × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi