தஞ்சாவூர், ஆக. 8: தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் முன்னாள் முதல்வர் கலைஞரின் 6வது நினைவு நாளையொட்டி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் 6வது ஆண்டு நினைவு நாளையொட்டி, நேற்று காலை 10.00 மணியளவில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் வி.திருவள்ளுவன், கலைஞரின் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், பல்கலைக்கழகப் பதிவாளர்(பொ) முனைவர் தியாகராஜன், பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர்கள், புலத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள், மாணவர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.
தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கலைஞர் நினைவு நாள்
previous post