தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்பல்கலைக்கழகத்தில் இன்று மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து, சொற்பொழிவாளர் கரு.ஆறுமுகத்தமிழன் கருத்துரை மற்றும் ஆலோசனைகள் வழங்க உள்ளார். மேலும், பல்வேறு எழுத்தாளர்களின் நூல்கள் மற்றும் தொழிற்பயிற்சிக்கான வழிகாட்டி கையேடுகள் இடம் பெறுகின்றன. மேலும், தொழில்முனைவோர் மற்றும் உயர்கல்விக்கான கடன் திட்ட உதவிகள் பெறுவது குறித்து வங்கியாளர்களின் ஆலோசனை வழங்கும் அரங்கம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறையின் மூலம் ஆலோசனை வழங்கும் அரங்கம் மற்றும் உயர்கல்வி செய்வதற்கான ஆலோசனை வழங்கும் அரங்கம் தேர்வு அமைக்கப்படுகிறது. எனவே, மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.