சென்னை: வடமாநிலங்களில் இருந்து குளிர் காற்று தெற்கு நோக்கி வீசுவதால், தமிழ்நாட்டில் 20ம் தேதி வரை பனி மூட்டம் நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. இருப்பினும், வடமாநிலங்களில் இருந்து தெற்கு நோக்கி, வங்கக் கடல் வழியாக குளிர்ந்த காற்று வீசி வருகிறது. இதனால், கடல் பரப்பும் குளிர்ந்து காணப்படுவதால் பனிப் பொழிவு மற்றும் பனி மூட்டம் நீடித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நள்ளிரவு நேரம் தொடங்கி காலை 8 மணி வரையும் கடும் பனிப் பொழிவு நீடித்து வருகிறது. தஞ்சாவூர், கன்னியாகுமரி, கொடைக்கானல், நாகப்பட்டினம், திருநெல்வேலி, திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பைவிட 3.0 டிகிரி செல்சியஸ் வெப்ப அளவு குறைவாக இருக்கும். இன்று தொடங்கி 20ம் தேதி வரை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரையில், வெப்ப அளவு குறைவாக இருக்கும் என்பதால் அதிகாலை நேரத்தில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். எனவே, நோயாளிகள், வயதானவர்கள், வாக்கிங் செல்பவர்கள் தகுந்த பாதுகாப்புடன் இருக்க வேண்டும். சென்னையிலும் அதிகாலை வேளையில் பனி மூட்டத்துக்கு வாய்ப்புள்ளது. பிற மாவட்டங்களில் 1.5 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை குறைவாக இருக்கும்….