கோவை, ஆக. 12: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் நோனி, தக்காளி, பப்பாளி பழத்தில் இருந்து மதிப்பூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வரும் 13,14 ஆகிய தேதிகளில் அளிக்கப்படுகிறது. இதில், நோனி பிளைன், குவாஷ், ஊறுகாய், ஜாம், தக்காளி சாஸ், கெட்சப், பேஸ்ட், பியுரி, பப்பாளியில் ஜாம், ஸ்குவாஷ், பேஸ்ட், கேண்டி ஆகியவை தயாரிக்க பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி கட்டணம் ரூ.1,770 ஆகும். இப்பயிற்சி அறுவடை பின்சார் தொழில்நுட்பம் மையத்தில் நடக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு 0422-6611268 என்ற எண்ைண தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.