திருச்செங்கோடு, மே 19: மொளசியில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருச்செங்கோடு ஒன்றியம், மொளசி பகுதியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில், அகில இந்திய பொது வேலை நிறுத்தத்தை விளக்கியும், அப்பகுதியில் கண்ணம்மாள் என்பவரது வீட்டை இடித்தவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. திருச்செங்கோடு ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமை தாங்கினார். ஏஐடியுசி தொழிற்சங்கத்தின் மாநில செயலாளர் சின்னுசாமி, அதிய இந்திய கிசான் சங்க மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் அன்புமணி, ஏஐடியுசி மாவட்ட தலைவர் ஜெயராமன், ராமகிருஷ்ணன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராமன், காத்தவராயன், குணசேகரன், சரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
0