தஞ்சாவூா், ஆக.12: தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஓய்வு பெற்ற 6-ம் அணி குறளக நண்பர்கள் 5வது மாநில மாநாடு தஞ்சையில் நடைபெற்றது. கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் காவல்துறையில் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றவர்கள் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாவட்டமாக குடும்பத்துடன் கூட்டம் நடத்தி வருகின்றனர். அதன்படி, இந்த ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற குறளகத்தின் மாநில மாநாட்டிற்கு தலைவர் தாமரை செல்வன் தலைமை வகித்தார். செயலாளர் பஞ்சாட்சரம், பொருளாளர் அருணாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் பணிபுரியும் போது நடந்த விஷயங்கள், குடும்ப நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பலவற்றை பகிர்ந்து பேசி மகிழ்ந்தனர். நிகழ்வில், 80 வயதை எட்டிய செயல் தலைவர் ராஜா சந்திரசேகருக்கு மாலை அணிவித்து முத்து விழா நடத்தப்பட்டது. அவருக்கு, அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறினர். இதில், நிர்வாகி மனோகரன், ஒருங்கிணைப்பாளர்கள் நாகநாதன், சரவணன், துணைத் தலைவர் சுப்பிரமணி, அமைப்பு செயலாளர் குபேந்திரன், இணை அமைப்பு செயலாளர் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாநாட்டுக்கான ஏற்பாடுகளை குழுத்தலைவர் விசுவாசம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.