கோவை, ஆக. 20: கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற உறுதிமொழி குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையிலான குழு நாளை ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இந்த குழுவில் மொத்தம் 12 எம்எல்ஏக்கள், அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். சட்டமன்றத்தில் முதல்வர், அமைச்சர்கள் அளிக்கும் உறுதிமொழியை இத்தனை காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என கேள்வி கேட்பது தான் உறுதிமொழி குழுவின் பணியாகும்.
அதன்படி, கோவை மாவட்டத்திற்கு நாளை வரும் சட்டமன்ற உறுதிமொழி குழு அரசின் பல்வேறு துறைகளின் கீழ் நிலுவையில் உள்ள உறுதிமொழிகளுள் நிறைவேற்றப்பட்ட மற்றும் நடந்து வரும் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். பின்னர், மாவட்ட கலெக்டர், அனைத்து அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவுள்ளனர்.