நெல்லை, செப்.3: தமிழ்நாடு கிராம வங்கியின் வி.எம்.சத்திரம் கிளை நிர்வாக வசதிக்காக பழைய கட்டிடத்தில் இருந்து திருச்செந்தூர் ரோட்டில் உள்ள புதிய கட்டிடத்திற்கு பல்வேறு வசதிகளுடன் இடமாற்றம் செய்யப்பட்டது. இதற்கான விழாவில் தமிழ்நாடு கிராம வங்கியின் நெல்லை மண்டல மேலாளர் கவுரிசங்கர் தலைமை வகித்தார். விஎம்சத்திரம் வங்கி கிளை மேலாளர் ஜெகன்ராஜன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நெல்லை மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜு கலந்து கொண்டு புதிய அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினார். விழாவில் அனைத்து வங்கி கிளை மேலாளர்கள், ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு கிராம வங்கியின் விஎம்சத்திரம் கிளை இடமாற்றம்
previous post